வெள்ளி, 26 நவம்பர், 2010

ஆண்டுகள் ஆனது இரண்டு
 உங்களை நினைத்தவுடன்
கண்களிலே வருகிறது நீர் திரண்டு


எங்கள் கைகளை பிடித்து கரை சேர்தவரே 
கரை வந்த பின்பு கரைந்தது ஏனோ


எபோழுதும் எங்களை தேடிக்கொண்டே
  இருக்கும் உங்களை
 நாங்கள் தேட வேண்டும் என்று நினைத்தது ஏனோ


உங்களோடு வாழ்ந்த  நாட்களையும்
உங்களோடு கழித்த நேரங்களையும்  
உங்கள் அன்பில் நனைத்த காலங்களையும்
எங்கள் மனதிலும் நினைவுகளிலும் பச்சை குத்தியவரே


மனமில்லாத மலர் போல   
நீர் இல்லாத கடல் போல
இலை இல்லா மரம் போல
இவ்வுலகில் நீங்கள் இல்லாமல் நாங்களும்


நீங்கள் இல்லாத எங்கள் இல்லம்
நிலவில்லா வானம் போல் அல்லவா
காட்சியளிகின்றது   


எங்களை செதுக்கிய சிற்பியன்றோ நீங்கள்
கண்களில் மறைந்தாலும்  எங்கள்
செயல்களிலே வாழ்பவரே


எங்கள் கலங்கரை விளக்கே
உங்கள் காலடி அடைந்திட
இன்னமும் உங்கள் அன்பில் ஒளியால்
பத்திரமாய் பயணிக்கும்
உங்கள் அன்பு உள்ளங்கள்
  

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

பிரிவுகள்

பிறக்கும் போதே கருவறையில்   இருந்து பிரிக்கப்பட்டோம் ஆரம்பமாகிவிட்டது
நமது பிரிவுகளின் இலக்கணமும் துவக்கங்கலும்
முதலில் பிரிந்தது நிம்மதியை மனங்களை கொன்று தின்னும் இந்த மானிட உலகத்திலே பிரிவுகளை வைத்து மனிதனை கொன்று தின்றான் இறைவன்
உடலை காயப்படுத்த பல ஆயுதங்கள் உள்ள இந்த உலகத்திலே மனதை
காயப்படுத்த மிகவும் கூர்மையான ஒரே ஆயுதம் பிரிவு
கல்லறைகளால் மட்டும் பிரிவுகள் வருவதில்லை சில்லரைகலாலும்
வருவதுண்டு
இன்பங்களை மட்டுமே சுவைக்க நினைக்கும் நம் இதயங்கள் உறவுகளின் பிரிவுகளையும் துன்பங்களையும் ஜிரநிப்பதில்லை
பிறப்பு முதல் இறப்பு வரை நிரந்தரமானது பிரிவு


அப்பா நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்
உங்கள் குரலை கேட்காத எங்கள் காதுகளை
செவிடகவே உணர்கின்றோம்
உங்களை பார்க்க முடியாத இந்த கண்களை
குருடாகவே நினைகின்றோம்

நீங்கள் இருக்கும் வரை தினமும் உங்கள் அரவணைப்பால்
தினமும் பிறந்து கொண்டு இருந்தோம் ஆனால்
நீங்கள் இறந்த பிறகோ உங்களை 
நினைத்து தினமும் இறந்து கொண்டு அல்லவே இருக்கின்றோம்.





  








        

வெள்ளி, 20 நவம்பர், 2009

உறவுகள்


அப்பா... இது ஒரு மந்திர சொல்லாகவே நினைக்கிறேன்.  விபரம் தெரியும் வயது வரை நம்மை சுற்றி ஒரு  பாதுகாப்பு  வளையத்தை ஏற்படுத்துவது  இவர்தான் . வாழ்கையில்   நாம் வளர்ந்து வரும் காலங்களில் இவரை பற்றி நாம் நினைப்பதில்லை, ஆனால்   இவரோ  நம்மைபற்றி , நமது வருங்காலத்தை  பற்றி மட்டுமே நினைப்பவர்.  தாயின் பாசம் மட்டும் நாம் அறிவோம் - காரணம   அன்பை வெளிபடையாக   காட்ட  கூடியவள் தாய் . ஆனால்   அன்பை கூட
அளவோடு  வெளிபடுத்த வேண்டியவர்  இவர்.   காரணம் எங்கே நாம் அதை தவறாக பயன்படுத்தி கொள்வோமா என்ற எண்ணம்  இவருக்கு  எப்போதும் உண்டு. நமது தேவைகளை  பூர்த்தி  செய்வதே  இவரது  ஒரே  லட்சியம் , சில நேரங்களில் இதற்காக இவர் படும் கஷ்டங்கள் துன்பங்கள்  பல ஆனாலும் அதை பற்றி நம்மிடம்       சொல்வதும் இல்லை தெரியபடுத்துவதும் இல்லை. நம்  வாழ்கையில் எத்தனையோ உறவுகள்  வந்து சென்றாலும்  இவர் இருக்கும்போது  இவரை நாம் நினைத்து பார்பதில்லை,  இவரை  நினைத்து அழும்பொழுது இவர் அருகில் இருப்பது இல்லை......

திங்கள், 16 நவம்பர், 2009






நினைவுகளில் நீஙகாதவரே நிலவை போல தூய்மையானவரே
கண்களிலே மறைந்தாலும் கனவுகளில் வாழ்பவரே
உள்ளத்தின் நிறத்தை உடையில் காண்பித்தவரே
எங்கள் மனங்களில் எல்லாம் மருதாணி இட்டு சென்றவரே
உங்கள் அன்பின் வாசனை தேடி அலைகிறோம்
நாங்கள் நடந்து செல்ல பாதைகளை அமைத்தவரே
நீங்கள் அமைத்த கொடுத்த பாதைகளில் பத்திரமாக பயணிக்கின்றோம்
ஏனோ எங்கள் உடல் மட்டும் இங்கே உயிரெல்லாம் உங்களை தேடி