நமது பிரிவுகளின் இலக்கணமும் துவக்கங்கலும்
முதலில் பிரிந்தது நிம்மதியை மனங்களை கொன்று தின்னும் இந்த மானிட உலகத்திலே பிரிவுகளை வைத்து மனிதனை கொன்று தின்றான் இறைவன்
உடலை காயப்படுத்த பல ஆயுதங்கள் உள்ள இந்த உலகத்திலே மனதை
காயப்படுத்த மிகவும் கூர்மையான ஒரே ஆயுதம் பிரிவு
கல்லறைகளால் மட்டும் பிரிவுகள் வருவதில்லை சில்லரைகலாலும்
வருவதுண்டு
இன்பங்களை மட்டுமே சுவைக்க நினைக்கும் நம் இதயங்கள் உறவுகளின் பிரிவுகளையும் துன்பங்களையும் ஜிரநிப்பதில்லை
பிறப்பு முதல் இறப்பு வரை நிரந்தரமானது பிரிவு
அப்பா நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்
உங்கள் குரலை கேட்காத எங்கள் காதுகளை
செவிடகவே உணர்கின்றோம்
உங்களை பார்க்க முடியாத இந்த கண்களை
குருடாகவே நினைகின்றோம்
நீங்கள் இருக்கும் வரை தினமும் உங்கள் அரவணைப்பால்
தினமும் பிறந்து கொண்டு இருந்தோம் ஆனால்
நீங்கள் இறந்த பிறகோ உங்களை
நினைத்து தினமும் இறந்து கொண்டு அல்லவே இருக்கின்றோம்.
.jpg)